Friday, 7 December 2012

அஜித் நடிகனா? மனிதனா?

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா?  உண்மை  எது என்று பார்க்கலாம்.

அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான ஏப்ரல் 17, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்14, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது. அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ல் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.

இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.

அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். 

2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.


இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு, குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 

ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”, என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2001 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 

கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனல் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.


விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்யான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அது ஒவ்வொரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.


இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது.. அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

 நீ எப்பவும் டாப் தான் ‘தல’.... 

நன்றி:நண்பர் ராம்குமார்க்கு நன்றி, அவரது பதிவை பார்க்க   சிவகாசிக்காரன்

Thursday, 29 November 2012

பில் கேட்ஸ்க்கே புரியாத விண்டோஸ் விஷயங்கள்

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று நினைத்தாலே நம் நினைவிற்கு வருவது விண்டோஸ் தான். உலக மக்கள் அனைவரையும் விண்டோஸ் தன் எளிமையான இயக்கமுறையால் மிகவும் கவர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகது. 
இந்த பெருமைகள் அனைத்தும் பில்கேட்ஸ் அவர்களுக்கே சொந்தம். விண்டோஸ்  ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பில்கேட்ஸ்ஆல் முடியாதது என்பது எதுவுமே  இல்லை என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால் தயவு செய்து அந்த முடிவை மாற்றிகொள்ளுங்கள் எத்தனுக்கும் எத்தன் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் இந்த உண்மை விண்டோஸ் விசயத்திலும் பில்கேட்ஸ் விசயத்திலும் பொருந்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் உட்பட முழு குழுவுக்கும் பல விஷயங்கள் எப்படி நடகிறது என்று பதில் சொல்ல முடியவில்லை! என்று சொன்னால் நம்புவீர்களா?

உண்மையில் அவர்களுக்கே புரியாமல் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நடக்கின்றன எடுத்து காட்டாக CON என்ற பெயரில் கோப்புறையை (Folderஉருவாக்க முடியாது CON என்ற பெயர் மட்டுமல்ல PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9  இந்த பெயர்களிலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கோப்புறையை (Folderஉருவாக்க முடியாது. இதற்கான காரணம் தெரியாமல் மைக்ரோசாப்ட்வும் அதன் தலைமையும் தவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்கள். இதுமட்டுமல்ல பில்கேட்ஸ்கே புரியாமல் விண்டோஸ்  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன அவற்றையும் பார்க்கலாம்.

சுவாரஸ்யம் 1:
1) முதலில் நோட்பேட்ஐ திறக்கவும். (Start -> Run -> Notepad ->Ok)
2) அதில் “Bush hid the facts” (" "குறி இல்லாமல்) வார்த்தைகளை மட்டும் டைப் செய்யவும்.
3) அதை சேமிக்கவும் (எந்த பெயரில் வேண்டுமானாலும் சேமிக்கலாம்).
4) அடுத்து அதை மூடி விட்டு மீண்டும் திறந்து பாருங்கள்
வித்தியாசமான பிழை பார்த்தீர்களா? யாராலும்  விளக்க முடியாது!

சுவாரஸ்யம் 2:

1) முதலில் எம் எஸ் வோர்ட் திறக்கவும். (Start -> MS Office -> MS Word)
2) அதில் =rand (150, 100) என்பதை  டைப் செய்து என்ட்டர் பட்டனை தட்டுங்கள்.
இதையும் யாராலும்  விளக்க முடியவில்லை.

சுவாரஸ்யம் 3:

நீங்கள் 9/11 இந்த தேதியை மறக்க முடியாது ஆம் இந்த தேதியில் தான் இரண்டு உலக வர்த்தக கோபுரங்கள் தகர்க்கப்பட்டன அந்த தாக்குதல் நடத்திய விமானத்தின் நம்பர் Q33N.

1. இப்ப நோட்பேட் (Notepad), வோர்ட்பேட்(Wordpad), வோர்ட்(MS Word) என்று எதை வேண்டுமானாலும் திறந்து கொள்ளுங்கள்.
2. எழுத்தின் அளவை(Font Size) 72 ஆக பெரியதாக்கி அதில் Q33N என்று டைப் செய்துகொள்ளுங்கள்.
3. அடுத்து அந்த எழுத்தின் ஸ்டைல்ஐ(Font Sytle)  Wingdings ஆக மாற்றுங்கள்.

ஆச்சரியமாக இருக்கின்றதா!  மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் உட்பட முழு குழுவுக்கும் இது எல்லாம் எப்படி நடக்கின்றது என்று பதில் சொல்ல முடியவில்லை! 

Tuesday, 27 November 2012

ஏர்டெல் டூ ஏர்செல் மெச்செஜ் போகாது....

அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்ட செல்போனை இப்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எஸ்.எம்.எஸ். மூலம் பிறரைத் தொடர்பு கொள்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிறந்த நாள் வாழ்த்து மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் பல லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் ஏர்செல் செல்பேசி சேவையிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களுக்கு ஏர்டெல் நிறுவனம் தடைவிதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து வோடஃபோன் சேவை எண்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாத நிலை ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. (இக்கட்டண நிர்ணயம், வசூல் தொடர்பாக முன்னணி நிறுவனங்களுக்கு இடையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

ஏர்செல் நிறுவனம் தனக்கு தர வேண்டிய டெர்மினேஷன் கட்டணத்தைத் செலுத்தாததால் இம்முடிவை ஏர்டெல் எடுத்ததாக தெரிகிறது. வோடாஃபோன் நிறுவனமும் இதே புகாரின் பேரில் ஏர்செல் கட்டமைப்பிலிருந்து எஸ்எம்எஸ் பெறுவதை தடை செய்துள்ளது. இதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப முடியாத நிலை உள்ளது. வோடாஃபோன் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, தமிழகம், டெல்லி, கர்நாடகா ஆகிய தொலைத் தொடர்பு மண்டலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் பெற முடியாது.

டெர்மினேஷன் கட்டணம் என்றல் என்ன?
இரு வெவ்வேறு செல்ஃபோன் நிறுவன வாடிக்கையாளர்கள் இடையில் தகவல் பரிமாற்றம் நிகழும்போது, தகவல் பெறும் வாடிக்கையாளரைக் கொண்ட நிறுவனத்துக்கு, அதை அனுப்பும் வாடிக்கையாளரைக் கொண்ட நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைதான் டெர்மினேஷன் கட்டணம் எனப்படுகிறது.
இந்த இரண்டு செல்பேசி நிறுவனங்களுக்கு இடையே (ஏர்செல் - ஏர்டெல்) நீண்ட காலமாக இருந்து வரும், எஸ்.எம்.எஸ். ஒப்பந்த விவகாரமே இதற்கு காரணமாகும். அதாவது எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு 10 பைசா என்ற வீதத்தில் எஸ்.எம்.எஸ். மாற்று (டெர்மினேஷன்) கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியதே காரணமாகும். இதை எதிர்த்து ஏர்செல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சில நாள்களில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"போற போக்கை பார்த்தால் இந்த நாட்ல 'சாதி விட்டு சாதி','மதம் விட்டு மதம்' மட்டுமில்ல 'நெட்வொர்க் விட்டு நெட்வொர்க்' கூட லவ் பண்ண முடியாது போல"

Monday, 26 November 2012

2012 இல் உலகம் அழியுமா????????????


உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில்  இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல இப்போது இருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் பிரளயத்தினால் அழியப்போகிறது.


பூமியில்  மிகப்பெரிய எரி கல் ஒன்று மோதியதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்ததனால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.இதனால்  பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ஏற்படப்போகும் பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாத சிலர்.உண்மையில் பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை மிக மிக நெருங்கி வரும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாகவும் வைப்புகள் உள்ளன.இதனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2/3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே ‘பிரளயம்’ எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள். 
2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.
இதற்கு ஆதாரமாக அவர்கள் சில காரணங்களை எடுத்துகாட்டாக சொல்லி வருகிறார்கள்.1. மாயன் காலண்டர்:
மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.2. சூரியப் புயல்கள்
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.3. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…
விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.
இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.4. கணிதவியல் அடிப்படையில்…
அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.


விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்.

சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.


Sunday, 25 November 2012

கூகுள் சேவைக்கு சீனா தடை இந்தியாவில்???????


சென்ற நவம்பர் மாதம் 9ஆம் தேதி அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, கூகுள் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. அதாவது கூகுள் தரும் தேடல் மற்றும் மெயில் வசதிகள் போன்றவை (Gmail, Play, Docs, Maps, and Analytics) சீனாவில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டன. கூகுள் தரும் வீடியோ வசதி (YouTube), 2009 ஆம் ஆண்டிலிருந்தே சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது அதுமட்டும் இல்லாமல் Google+, Twitter, Dropbox, Facebook and Foursquare ஆகிய நிறுவனங்களின் தளங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன மற்ற வசதிகளுக்கும் அவ்வப்போது தடை ஏற்படுத்தப்பட்டன. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது. (காண்க:http://www.google.com/transparencyreport/traffic/) அதில் இந்த தகவல் காணப்படுகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் இன்டர்நெட் பணிகளை மேற்பார்வையிடும் Greatfire.org என்ற முகவரியிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை:
இரண்டு ஆண்டுகளாகவே, சீனாவுடன் அதன் தணிக்கை விதிகள் குறித்து கூகுள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கூகுள் தேடல் தளத்தில் இடப்படும் சொற்களைத் தணிக்கை செய்திட சீனா உரிமை கேட்கிறது. ஆனால் கூகுள் அதனை ஏற்கவில்லை. இதனால், 2010 ஆம் ஆண்டில், சீனாவில் இயங்கிய தன் சர்வர்கள் அனைத்தையும், ஹாங்காங் நாட்டுக்கு கூகுள் மாற்றியது. சீன அதிகாரிகள் விதித்த தடைகள் இந்த நடவடிக்கைக்குக் காரணமாய் இருந்தன. மேலும், சீனாவில் இருந்துதான், பல ஹேக்கர்கள் இணைய தளங்களுக்குக் கெடுதல் ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டினையும் கூகுள் வைத்தது. சீன அரசாங்கத்தின் தணிக்கை விதி முறைகளைத் தாங்கள் ஏற்க முடியாது என கூகுள் நிறுவனத் தலைவர் அறிவித்தார்.

கூகுள் தவிர வேறு எந்த இணைய தளங்கள்  முடக்கப்பட்டுள்ளன:
சென்ற மாதம்(அக்டோபர் 2012), நியுயார்க் டைம்ஸ் என்ற இதழின் இணைய தளத்தையும் சீனா தன் நாட்டில் தடை செய்தது. சீன நாட்டின் தலைமை அமைச்சர் குறித்து தவறான தகவல்களைத் தந்ததனால் இந்த இணையதளம் தடை செய்யப்பட்டதாக  சீனா கூறியுள்ளது.  அதே போல Bloomberg News என்ற இதழின் இணைய தளமும் தடை செய்யப்பட்டது. 

இணைய தளத்தை சீனா எப்படி தடை செய்கிறது:
அதிக திறன் கொண்ட, இணையத் தடை செய்திடும் வசதிகளை சீனா உருவாக்கி வைத்துள்ளது. பல்லாயிரக் கணக்கான பொறியாளர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்டர்நெட்டில் தங்கள் நாடு, மக்கள் குறித்து வெளியாகும் தகவல்களைக் கண்காணித்து, உடனே அவற்றை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேறு எந்த நாட்டில் கூகிள் இணைய தளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா மட்டுமின்றி, முன்பு செப்டம்பர் மாதம், ஈரான் அரசும் கூகுள் மெயில் சேவைக்குத் தடை விதித்தது. ஈரான் நாட்டின் அதிகாரிகள் பலர் இது குறித்துக் கேள்விகளை எழுப்பிய பின்னர், ஓரளவிற்கு மட்டும் தடையை நீக்கியது. ஈரான் சில வேளைகளில், இன்டர்நெட் முழுவதையும் தடை செய்து, தன் நாட்டிற்கு மட்டுமான நெட் சேவையினை இயக்கியது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் தலைவர்களை மாற்றும் சீன அரசாங்கத்தின் மிக முக்கிய கூட்டத்தின் போது இது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் தடை ஏற்பட்டுள்ளதால் கூகுள் நிறுவனத்திற்கு என்ன பதிப்பு:
மிகப் பெரிய அளவில் ஜனத்தொகை கொண்டுள்ள சீனாவில், கூகுள் தடை பெறுவது, கூகுள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியாக இழப்பைத் தரும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். விளம்பர வருவாய் பெருமளவில் இழக்கப்படும் என கணக்கிடுகின்றனர். இந்த கண்ணா மூச்சி விளையாட்டு எப்படி முடியும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து வருகின்றன.


இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா?
இந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களில் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும்.
சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த அளவிற்கு தடை ஆணை வழங்கப்படவில்லை. தனி நபர்கள் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. சென்ற 2011 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஐந்து ஆணைகள் மூலம் ஒன்பது தகவல் கட்டுரைகள் நீக்கப்பட, நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. 
கூகுள் இந்த ஆணைகளை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு தரப்பட்ட ஆணைகளில் இதுவரை 33% மட்டுமே நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் மூலம் கூகுள் பெறும் தடைகளின் எண்ணிக்கையில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க நீதிமன்றங்கள் இதே காலத்தில் 209 ஆணைகளை வழங்கி உள்ளன. அடுத்த இடங்களில், ஜெர்மனி, பிரேசில், துருக்கி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை உள்ளன.

Saturday, 24 November 2012

குபேரர் அல்ல சிரிக்கும் புத்தர் பூடேய்.......பல வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் வடக்கு திசையில் குபேரர் அமர்ந்திருந்தால் அதிருஷடம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கை இருக்கும் பார்த்தாலே ஆனந்தம் பொங்கும் சந்தோஷமான செழிப்பான தோற்றத்துடன் இருக்கும் பொம்மைகள்  உண்மையான குபேரர் அல்ல உண்மையில் அது  சீனாவின் சிரிக்கும் புத்தர்  என்ற பெயரில் தொந்தியும் தொப்பையுமாக சிரித்த முகத்துடன் ஒரு சிலை கிடைக்கும் இந்தப் பொம்மைச் சிலை பலவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பணம் மடியில் கொட்டும் ஒன்றில் தன் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டிருப்பது போல இருக்கும். இதுவும் குபேரன் தான் என்று சொல்கிறார்கள். உண்மையில் குபேரர் வேறு சிரிக்கும் புத்தர் பூடேய் வேறு.

 சிரிக்கும் புத்தர் பூடேய் வரலாறு:

           ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிரிக்கும் புத்தரைப் போலவே ஒருவர் வாழ்ந்திருந்தார் என்பது  சீனத்தில் நிலவும் நம்பிக்கை.அவர் பெயர் பூடேய். அவர் லியாங் முடியாட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு ச்சான் பிக்கு.மிகுந்த கருணையும் தயாள குணமும் கொண்ட இவரை முக்கிய ஏழு கடவுளர்களுள் ஒருவராக தாவோ மற்றும் ஜப்பானிய ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

சிரிக்கும் புத்தரின் தொப்பையைத் தடவினால் பெரிய அதிருஷ்டமும்செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முடித்திருத்தகம் மற்றும் உணவகங்களில் இந்த புத்தர் சிலையை வைத்திருந்தால் அதிருஷ்டம் பெருகும் என்பதும் பரவலானதொரு நம்பிக்கை.இதனாலேயே உணவகம்,விடுதிகள் போன்ற இடங்களில் நுழைவாயிலிலேயே சிரிக்கும் புத்தரை நாம் காணலாம்.

வணிகப் பயணிகள் மற்றும் பிக்குகள் பௌத்ததை கிழக்கில் ஜப்பான் கொரியாபோன்ற நாடுகளை நோக்கியும் வடக்கில் ஆஃப்கானிஸ்தான் திபெத் நோக்கியும்தெற்கில் இந்தோனேசியா மற்றும் ஸ்ரீலங்கா நோக்கியும் நூற்றாண்டுகளாகக் கொண்டு சென்று பரப்பியிருக்கிறார்கள். பல்வேறு கலாசாரங்கள் பௌத்ததைஉள்வாங்கியதால் பௌத்தத்தில் ஏற்பட்ட சின்னச் சின்ன மாற்றங்கள் இயல்பாய்நிகழ்ந்தன.

10ஆம் நூற்றாண்டில்தான் சீனத்து பௌத்ததில் மகிழ்ச்சியின் கூறுகளையெல்லாம் சேர்த்து உள்வாங்கி, ஒரு கையில் மணிமாலையும் மற்றொரு கையில் பொற்காசுகள் நிறைக்கப்பட்ட பையுமாக சிரிக்கும் புத்தர் என்ற கருத்தாக்கம் உருவானது. சுற்றிலும் இருந்த குழந்தைகள் பல தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழும் சீனத்து பெரிய குடும்பத்தைக் குறித்தது.

சிரிக்கும் புத்தரை பூடேய் என்று அழைக்கிறார்கள் கிழக்காசியர்கள். ஜப்பானிலோ இவரை ஹோடேய் என்பார்கள். சிரிக்கும் புத்தர் என்பதுதான் பொதுவாக வழக்கிலிருக்கும் பெயர். மி-லோ-பூ என்றறியப்படும் பூடேய் குறித்து ஒரு கவிதை சீனத்திலுண்டு.

மி-லோ,
உண்மை மி-லோ
எண்ணற்ற முறை
மீண்டும் மீண்டும் 
மனிதகுலத்தில் அவதரித்தும் 
அடையாளம் காண்பதில்லை
சமகால மனிதன்

வானிலை மாற்றங்கள் குறித்த பூடேய்யின் முன்னுரைப்புகள் தான் அவரைப் பிரபலமாக்கியது. மறுசிந்தனையற்று பின்பற்றக் கூடிய அளவில் மக்கள் அவரை நம்பினர். குறிப்பாலோ சொற்களாலோ மக்களுக்கு வானிலை மாற்றத்தை எடுத்துரைத்துக் காத்தார். மழை வரும் என்றுரைக்க அவர் ஈரக் காலணி அணிந்தார். மரப் பாதணி அணிந்திருந்தாரேயானால் வெயிலை எதிர்பார்த்தனர். அதேபோல ஊரின் பாலத்தின் மீது குத்த வைத்து உட்கார்ந்து அவர் உறங்கினாலும் வெயில் நிச்சயம். 

பூடேய் தானே வடித்த பல சிறந்த கவிதைகளை விட்டுச் சென்றிருப்பதாக சீனர்கள் நம்புகிறார்கள். தியானத்தின் மூலம் மனம் மேம்படுவதைச் சொல்லும் ஒரு கவிதை இதோ-

பத்தாயிரம் தர்மங்கள்
எத்தனை வேறுபாடுகள்?
மனம்?
அதை எப்படி வேறுபடுத்த?
மத நூல்களைத் தேடி என்ன பயன்?
மன அரசன் தன்னியல்புடன்
அனைத்து அறிவடுக்குகளையும் துறந்து
கற்காதிருக்கக்
கற்பவனே அறிஞன்

ஊர் ஊராய்ச் சுற்றித் திரியும் வாழ்க்கையைச் சொல்லும் இன்னொரு கவிதை -
ஒரு திருவோட்டிலிருந்து
உண்கிறேன் ஓராயிரம்
குடும்பத்துச் சோற்றை
திரிகிறேன் தனியே 
பத்தாயிரம் மைல்கள்
என் கண்களில் 
கருணையை
காண்போர் அரிது
வெண்மேகங்களிடையே
தேடுகிறேன் ஞானத்தை

இன்றும் செக்கியாங் மாநிலத்து இயூ-லிங் ஆலயத்திற்குள் பூடேய்யின் பழம்ஓவியத்தைக் காணலாம். அது தான் அவரது இறப்பிடம்.

இன்றைய காலகட்டத்தில் சிரிக்கும் புத்தர் உருவமானது மகிழ்ச்சியையும்நல்வாழ்வையும் நினைவு படுத்தி வாழ்க்கையைச் சுவைக்கச் சொல்லும் குறியீடாகவே ஆகிவிட்டது. சமீப சில ஆண்டுகளில், பங்ஷ்வேய் எனும் சீன வாஸ்து சாஸ்திரத்தைப் போலவே இவரும் சீன எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் பிரபலமாகி வருகிறார். சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் வளமையும்மகிழ்ச்சியும் செல்வமும் வீட்டில் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. சிரிக்கும் புத்தர் என்ற பெயருக்கும் உருவத்திற்கும் அவரது உடைகளுக்கும்பின்னால் ஒரு செறிவான வரலாறு உண்டு. தாவோ மதப் பின்னணியையும் மறுக்கமுடியாது என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முன்வைப்பு.

வாழ்க்கை ஒரு விளையாட்டு. படைத்தவனின் அருளைத் துணை கொண்டு நாம் நமது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தாலும் வாழ்க்கையை சிரித்துக் குதூகலித்துக் கடக்க வேண்டும் என்பதைச் சொல்வதைப் போல இவர் சிரித்துக் கொண்டே அமர்ந்திருக்கிறார். அனைத்தையும் மன்னித்து ஏற்கும் கருணை உள்ளம் கொண்டவர் பூடேய்.

பார்ப்பதற்கு மொட்டைத் தலை, சுருக்கங்கள் விழுந்த நெற்றி மற்றும்பொக்கைவாய்ச் சிரிப்புடன் இருப்பதால் மட்டுமே அவருக்கு சிரிக்கும் புத்தர்என்ற பெயர் வந்துவிடவில்லை. அங்கியால் மூடப் படாத உருண்டையான தொப்பையும் குண்டான உருவமும் குறிப்பது திருப்தியையும் நிறைவையும்.இவர் தன் சிரிப்பால் உலகுக்குச் சொல்லும் செய்தி மகிழ்ச்சி. இவர் புத்தரின் பலஅவதாரங்களில் ஒன்றான போதிசத்வ மைத்ரேயா என்பதே சீனர்களின் நம்பிக்கை. போதிசத்வ மைத்ரேயா என்றாலே எதிர்கால புத்தர் என்றொரு பொருள் உண்டு. அதிருஷ்டத்தைக் கொணரும் என்று நம்பப்படும் இவரது உருவம் முற்காலத்தில் பௌத்த மடாலயங்களில் காணப்பட்டன.இப்போதெல்லாம் சீனர்கள் மட்டுமின்றி எல்லா இனத்தவருக்கும் இவரது உருவம் விருப்பமாகி விட்டிருக்கிறது.

மைத்ரேயா என்ற பெயர் மைத்ரி என்ற வடமொழிச் சொல்லிலிருந்து உதித்தது.அன்பு, கருணை, பெருந்தன்மை, நட்பு, தோழமை, நல்லெண்ணம் ஆகிய பலவற்றைக் குறிக்கும் சொல் மைத்ரி. மைத்ரேய புத்தரை மீ-லே-பூ என்றும் சீனர்கள் சொல்வார்கள்.

சிரிக்கும் புத்தர் கையில் ஒரு துணிப்பையைத் தூக்கிக் கொண்டிப்பதைக் காணலாம். அதில் கொடுத்துத் தீராத செல்வம் இருக்கிறது. அரிய நவமணிகள், உணவு, அரிய தின்பண்டங்கள், மிட்டாய்கள் எல்லாமே குழந்தைகளுக்கானவை.நம்மிடமிருந்து எல்லாத் துயரங்களையும் வலிகளையும் தான் எடுத்துக் கொண்டு நமது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் சிரிக்கும் புத்தர். குறிப்பாக, ஏழை எளியோரை ஆதரித்து ரட்சிக்கும் குணமுடையவர் இவர். புத்தரிடமிருக்கும் அந்தத் துணிப்பையில் உலகாயாத பருண்மைகள் மட்டுமின்றி, குழந்தைச் செல்வமும் இருக்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஒருவகைச் செல்வம் குழந்தைகள். சிரிக்கும் புத்தருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம். அவர்களது அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவார். சிரிக்கும் புத்தரின் சில சிலைகளில் அவரைச் சுற்றியும் அவர் மேனியின் மீதும் சிறு குழந்தைகள் துள்ளி விளையாடுவதைப் போல அமைத்திருப்பார்கள். காலடியில் குழந்தைகள் இருப்பதைப் போன்றும் சில சிலைகள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.வேறொரு வகை சிரிக்கும் புத்தரை வண்டியில் வைத்து சிறுவர்கள் இழுப்பதையும் காணலாம். இதில் புத்தர் தன் கையில் மாய விசிறியை வைத்திருப்பார். இந்த விசிறி எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியது. அது மட்டுமின்றி இந்த விசிறி, அனைத்து வளங்களும் கொண்டிருக்கும் சீனத்து மேட்டிமையைக் குறிக்கக் கூடியது. சிரிக்கும் புத்தர் கையில் திருவோடு ஏந்தியிருப்பதையும் காணலாம். இது இரந்து உண்ணும் துறவு நிலையைக் குறிக்கும்.

நவீன சீனத்தில் வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியின் அர்த்தங்கள் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளன. சீனத்தில் மட்டுமின்றி உலகநாடுகள் எல்லாவற்றிலுமே இதே நிலைதான். புத்தர் கையிலிருக்கும் திருவோட்டுக்கு இன்றைய சீனர்களிடையே அதிக கவனம் இல்லை. பொருளாதாயங்களிலிருந்து பற்றற்ற ஒரு நிலையை வலியுறுத்துவதை படிப்படியாக மறந்து மக்கள் வேறு பல அர்த்த அடுக்குகளை அவர் மீது ஏற்றியுள்ளனர். இன்றைய உலகம் மகிழ்ச்சியைக் கணிக்க செல்வத்தையும் பொருளையும் அளவுகோல்களாக்கி இருப்பதால் நவீன சிரிக்கும் புத்தர் செல்வத்தையும் வளமையையும் செழிப்பையும் அருளும் கடவுளாகக் கருதப்படுகிறார்.

மகிழ்ச்சி, செழுமை, நீண்ட ஆயுள் போன்றவற்றைக் குறிக்கும் பெரிய திறந்த அவரது தொப்பை முன்நீட்டிக் கொண்டிருக்கும். நிரந்தரச் சிரிப்பு அவர் முகத்தில் உறைந்திருக்கும். உற்சாகமாகச் சிரிக்கும் புத்தரான பூடேய்யின் இந்த உருவமே அவரைக் காணும் ஒருவருக்குள் புது உற்சாகமும் மகிழ்ச்சியும் வரும். பூடேய் என்றாலே துணிப்பை அல்லது தினீப்பிரியர் என்று பொருள்.

ச்சான் ஆலயங்களின் நுழைவாயிலிலும் முன்முற்றங்களிலும் காணப்படும்பூடேய் மஹாயான பௌத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம். பௌத்தமடாலயங்களில் முன் கூடத்தில் இவரது திருவுருவச் சிலை இருக்கும்.பூடேய்யின் உருவம் பரவலாக விரும்பப்பட்டும் வழிபடப்பட்டும் வந்த போது தான் ஏற்கனவே பௌத்தத்தில் இருந்த போதிசத்வ மைத்ரேயர் எனும் கருத்தாக்கமும் நம்பிக்கையும் பூடேய்யின் மீது ஏற்றப் பட்டிருக்கிறது என்பதுவரலாற்றாய்வாளர்களின் கருத்து.

சீனத்தில் மிக அதிக பொறுமைசாலியை 'பெருவயிறுடையவன்'என்றழைப்பார்கள். இதுவும் கூட பூடேய்யின் தொந்தி வயிறு உருவாகக் காரணமாக இருக்கலாம். இந்த தெய்வம் மிகவும் பொறுமைசாலியாக அனைத்தையும் பொறுத்து அருள்பவர் என்பதை உருவகிக்க தொப்பையை ஒரு முக்கிய அடையாளமாக்கி இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுவர்.

சீனத்தில் நிறைய வட்டாரங்களில் மைத்ரேய புத்தர் குழந்தைச் செல்வத்தைஅருளுபவராக அறியப்படுகிறார். அதுவும் ஆண்மகவுகளைக் கொடுத்துமகிழ்விப்பவராக சீனர்கள் நம்பி வணங்குகிறார்கள். இவரை வணங்கி இவரதுதொப்பையைத் தடவும் பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதுபரவலான நம்பிக்கை.

வீடுகளில், அறைகளில், அலுவலகங்களில், கடைகளில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தம் மேசையில் என்று, சிரிக்கும் புத்தர் சிலையை வைத்துக் கொள்வது சமீப காலங்களில் அதிகமும் காணக் கூடியதாகவே இருக்கின்றது. சொல்லப் போனால் உட்புற அலங்கரிப்பாளர்களே இச்சிலையைப் பரிந்துரைக்கின்றனர். இதன் காரணமாக உலகளவில் சிரிக்கும் புத்தர் சிலைகளில் பல்வேறு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும் கூடியபடியே இருக்கின்றது. நுழைவாயிலை நோக்கி வைப்பதே வழக்கம்.மரம், உலோகம், கல் போன்ற பலவற்றிலும் சிலைகள் செய்யப் பட்டபோதிலும் கற்சிலைகளே ஆக அதிகம் விரும்பப்படுகின்றன.

உண்மையில் இவர்தான் குபேரர்.


                                                                                                 குபேரனின் ஆலயங்கள்.... 

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் ஜம்பத்தாறு கிலோ மீட்டர் தொலைவில் சுருட்டப்பள்ளியில் உள்ள ஈஸ்வரன் ஆலயத்தில் குபேரனின் சன்னதி உள்ளது. கீவளூர், அட்சயலிங்கேஸ்வரர் ஆலயத்தில், சந்திரகுப்தன் என்ற ஏழைக்காக, குபேரன் நிறைய செல்வம் அளித்ததாக வரலாறு உள்ளது. சம்பந்தர், அப்பர் பாடிய திருத்தலம் இது. அம்பாள் ஸ்ரீசுந்தரகுசாம்பிகை, தாயார் சன்னதியில் குபேரன் உள்ளார். ஈரோட்டில் சங்கமேஸ்வரர் பவானி ஆலயத்திலும் குபேரன் வாசம் செய்கிறார். 

தாமரையும், குபேரனும்........ 

ஸ்ரீமகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் மிகவும் உகந்தவை தாமரை மலர்களே, எனவே, முடிந்தவர்கள் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது, குபேர அஷ்டோத்திர சதநாமாவளி சொல்லும் போது, 108 தாமரை மலர்களையோ, இதழ்களையோ பயன்படுத்துவது மிகவும் நல்லது. தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளியிலான, சின்னச் சின்ன தாமரை மலர்களையும், பூஜைக்குப் பயன்படுத்தி விட்டு, பின்பு எடுத்து வைத்து எப்போதும் பயன்படுத்திப் பலன் அடையலாம். 

குபேர பொம்மைகள் வைப்பது நல்லது...... 

இரண்டு கைகளையும் மேலே தூக்கி, தொப்பையுடன் உள்ள பொம்மைகளின் தலைமேல் காசுகள் வைத்து வடக்குப் பார்த்து வைப்பது நல்லது. 

குபேரன் படம்.......... 

மகாலட்சுமியுடன் சேர்ந்த ஸ்ரீலட்சுமி குபேரன் படத்தை வாங்கி வைத்துப் பூஜித்து பலன் அடையலாம்.ஸ்ரீகுபேர வாசல், ஸ்லோகத்தையும் படித்தால், செல்வம் கொட்டும். எனவே தூய பக்தியுடன், தெய்வ நம்பிக்கையுடன் பூஜித்தால், ஸ்ரீமகாலட்சுமியின் பேரருளும், குபேரனின் கருணையும் இணைந்து நம் இல்லங்களில் ஐஸ்வர்யம் கொட்டும்.


Thursday, 22 November 2012

விப்ரோ உலகிலேயே நம்பர் ஒன்......


பசுமை சூழலைப் போற்றும் நிறுவனங்களுள் உலகிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது இந்திய ஐடி நிறுவனமான விப்ரோ. ஹெச்பி, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அடுத்துதான் இடம்பிடித்துள்ளன. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் மூன்று முக்கிய சுற்றுச்சூழல் விதிகளைக் கடைப்பிடித்தாக வேண்டும். மின்சார சிக்கனம், தட்பவெப்ப நிலை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பசுமையைப் பாதுகாத்தல். இந்த மூன்றையும் நிறைவேற்றும் வகையிலான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த வகையில் உலகிலேயே சாதனை படைத்த நிறுவனமாக விப்ரோவை தேர்வு செய்துள்ளது கிரீன்பீஸ் அமைப்பு. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்கூட சுற்றுச் சூழல் மற்றும் பசுமையைக் காக்கும் விதத்தில் தனது மின்னணுப் பொருள்களை விப்ரோ உற்பத்தி செய்துள்ளது. அந்த வகையில் உலகின் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது விப்ரோ என கிரீன் பீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பசுமையை பாதிக்காத அளவு சிறப்பாக செயல்படும் உலகின் டாப் 10 நிறுவனங்கள் இவை:

1 Wipro
2 HP
3 Nokia
4 Acer
5 Dell
6 Apple
7 Samsung
8 Sony
9 Lenovo
10 Philips

தயாராக இருக்கின்றனராம்.

        இந்த ஆண்டின் கடைசி மாசமான  டிசம்பர் 2012-ல் உள்ள, ஐந்து வாரங்களும், சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகள் தொடர்ந்து வருவது, அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.நடப்பு, 2012ம் ஆண்டை நிறைவு செய்ய வருகை தரும், டிசம்பர் மாதத்தில், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகள், மாதம் முழுவதும், ஐந்து வாரங்களும் தொடர்ந்து வருகிறது. 843 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று வரும் மாதம் மிகவும் அதிர்ஷ்டமாம் இதையும் கொண்டாட உலக மக்கள் தயாராக தயாராகிக்கொண்டு இருக்கின்றனராம்.

Monday, 19 November 2012

ஈசிய அனிமேஷன் செய்யலாம் வாங்க

போட்டோ வை அனிமேட் செய்ய இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நிறைய அனிமேஷன் இல்லை என்றாலும் அனிமேட் உருவாக்குவது மிகவும்

ஈசியாக உருவாக்கலாம் அதற்கு முதலில் இந்த  http://www.loogix.com/ தளத்திற்கு

செல்லவும் பிறகு உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களுக்கு எந்த

அனிமேஷன் புடித்து உள்ளதோ அந்த படத்தின் மேலே கிளிக் செய்யவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்.

அடுத்து போட்டோ அப்லோட் செய்து  Generate Animation கிளிக் செய்யவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்.அவ்வளவு தான் அனிமேஷன் தயார்  இந்த படத்தை சேமிக்க வலது கிளிக் செய்து ஐ கிளிக் செய்யவும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த தளத்தில் இருந்தே பேஸ்புக்யில் சேர் செய்யலாம் அல்லது கோடிங் எடுத்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளலாம்
இதோ இந்த தளத்தில் நான் அனிமேஷன் செய்த படங்கள் உங்கள் பார்வைக்கு.