Sunday, 30 September 2012

கீறல் விழுந்த சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெறலாம்...இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்துபிறந்தநாள் நிகழ்சிகள்திருமண நிகழ்சிகள்நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால்இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வுதூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். 
இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.
வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களைவீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நாமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் 'டொயிங்என்ற சத்தத்துடன் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.
சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள்பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவேமுதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.
நீங்கள் இந்த http://isobuster.com/ இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும். இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்


யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்கபேரலல்சீரியல் போர்ட் என இருந்த காலம் போய்இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில்குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டுஅதற்கேற்பகீ போர்டுமவுஸ்வெப்கேமராபிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும்அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில்பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்  பிரச்னைகளையும்  எதிர்கொள்கின்றனர்.  அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம். 

கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில்முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு  1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன.   பழைய வகை   சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப் பட்டிருந்தன. மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பெரும்பாலும் பயன்பட்டு வந்தன. பின்னர் இவற்றின் பயன்பாடு அதிகமாகவும்வேகத் தேவை கூடுதலாகவும் ஆன போது,   USB  2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. பழைய கம்ப்யூட்டர்  வைத்திருக்கும் பல வாசகர்கள்,  இந்த இரண்டில் எது தங்களிடம் உள்ளது என்று தெரிந்து கொள்வது எப்படி எனக் கேட்டுள்ளனர். 
Start –> My Computer  சென்று  Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware  டேபில் கிளிக் செய்து பின்Device Manager ல் கிளிக் செய்யவும்.  கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில்   Universal Serial Bus controllers   என்பதனை அடுத்து   கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.  உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1   இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும். 
உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 2.0 இருந்தால் அங்குEnhanced Host Controller or USB 2.0 Controller  என்று காட்டப்படும்.  நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்புவெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி.  லோகோ இருக்கும். நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்  இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும்.
இன்னொரு வகை பிரச்னையையும் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவினைஅதன் போர்ட்டில் செருகினால்அதனைக் கம்ப்யூட்டர் உணர்ந்து காட்டுவதே இல்லை எனக் கூறி உள்ளனர்.  

பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் சிஸ்டம் புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும். அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவாஆடியோ பைல்களை இயக்கவாவீடியோ பைல்களை இயக்கவாஎன்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும்.  ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைச் சரி செய்திடகீழ்க்குறித்தபடி செயல்பட வேண்டும்.   Start/Control Panel  சென்று அங்கு Administrative Tools.  என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools  பெற முடியும். அதில்Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management  என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம்  a removable drive  என்றபடி ஒரு டிரைவ் காணப்படும். இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து கொண்டதாக இருக்கலாம்.  இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change   என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப் படாததாக இருக்க வேண்டும். இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும்.  இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் பிரிவை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும். 

யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும். அதுவும் விண்டோஸ்2000 இயக்கத் தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப் பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும். 

இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.

µTorrent மென்பொருள்


µTorrent மென்பொருளி​ன் புதிய
சீரியல் எண்களுடன் கூடிய மென்பொருட்களை இலகுவாகவும், விரைவாகவும் தேடி தரவிறக்கம் செய்வதற்கு µTorrent மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக விளங்குகின்றது. முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது விண்டோஸ், மெக், லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
தற்போது அதன் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட குறைபாடுகள் சிலவற்றை நீக்கி, செயற்படுதிறனை அதிகரித்து µTorrent 3.22 வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதிப்பானது குறைந்தளவு CPU பாவனையை கொண்டுள்ளதுடன் தரவிறக்கப்படும் மென்பொருளை வன்றட்டில் சேமிக்கும் போது விரைவாகவும், செயற்படும் திறனையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருவருக்கு தவறுதலாக E mail அனுப்பி விட்டீர்களா? உடனடியாக Cancel செய்ய..........


பெரும்பாலான மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன், அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும். கட்டளை கொடுத்த பின்னர், அதனைத் திரும்பப் பெற இயலாது. நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவரின் இன் பாக்ஸுக்கு அந்த மெயில் சென்றுவிடும்.
ஒரு நொடியில் இது அனுப்பப்படுகிறது. இதனைத் திரும்பப் பெற பகீரதப் பிரயத்னம் செய்திட வேண்டும். அந்த மெயிலைப் பெறும் சர்வரின் அட்மினிஸ்ட் ரேட்டரைத் தொடர்பு கொண்டு, மெயிலை அவர் முயற்சி எடுத்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். ஆனால், இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை. பெரும்பாலான சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் இது போன்ற வேண்டுகோள்களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். இது மற்றவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது என எண்ணுவார்கள்.
ஆனால், இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது.அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதனை நிறுத்தலாம். இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்பட வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை. மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம். அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும்.
ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திட லாம்.
இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும். ஜிமெயில் வசதியை இணைய தள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.
ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது. 
அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர், அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது.

நன்றி-கலீல் பாகவீ

WiFi என்றால் என்ன?
WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.
WiFi Hotspots என்றால் என்ன?
WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்கள் கணினியில் செயல்படுத்திவிட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்றும் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட்ஸ்பாட்டாக(access point) இருக்கும்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?
1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)
2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.
3. ஒரு கம்பியில்லா திசைவி(wireless router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட(inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.
5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல்கள்(router setup instructions) ஒரு நகல்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?
1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5.இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்துகொள்ளலாம்

அவுட்லுக் என மாறியது மைக்ரோசாப்ட் ஹாட்மெயில்மைக்ரோசாப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இமெயில் சேவையான ஹாட்மெயிலுக்குஅவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ல் உருவாக்கிய இந்த ஹாட்மெயில் சேவையை,மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1997ம் ஆண்டில் 40 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கியது. இப்போது 15 ஆண்டுக்கு பிறகு அதன் பெயரை அவுட்லுக் என நேற்று மாற்றியுள்ளது. 

அவுட்லுக் இமெயிலில் புதிய வசதிகளையும் வாரி வழங்கியுள்ளது. இப்போது அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது பேஸ்புக்டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள். 
அவுட்லுக் இமெயில் சேவையில் பேஸ்புக் சாட் வசதியை பெறலாம். அதோடு பேஸ்புக்டுவிட்டரில் இருந்து வரும் தகவல்களும் உடனுக்குடன் அவுட்லுக் இமெயில் சேவையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

வேர்ட்ஸ்எக்எல்பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில்அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும். ஸ்கைப் வீடியோ கால் வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம். ஆனால்இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதியைஇன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன்தான் பயன்படுத்த முடியும்.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் –https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

 • District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
 • Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
 • Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
 • First Name: உங்களது பெயர்
 • உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
  Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
 • Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
 • Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
 • Place of Birth: பிறந்த ஊர்
 • District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
 • Qualification: உங்களது படிப்பு
 • Profession: தொழில்
 • Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
 • Height (cms): உயரம்
 • Present Address: தற்போதைய முகவரி
 • Permanent Address: நிரந்தர முகவரி
 • Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
 • Phone No: தொலைபேசி எண்
 • Mobile No : மொபையில் எண்
 • Email Address: இமெயில் முகவரி
 • Marital Status: திருமணமான தகவல்
 • Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
 • Father’s Name: தந்தை பெயர்
 • Mother’s Name: தாயார் பெயர்
 • தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
 • பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
 • உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து
 • Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
 • Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
 • Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
 • File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
 • Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
 • ரேசன் கார்டு
 • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • வாக்காளர் அடையாள அட்டை
 • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
 • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)
 • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
 • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
 • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
 • 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
 • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
 • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும்  மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
 • மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
 • பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
நன்றி:-மஸ்தான் ஒலி

செல்போன் வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது. அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு என் மாற்றி விட்டார். ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை. நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால், SMS வருகிறது என குழம்பி போனார். என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்டார். அவருக்காக எனது நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இவர் வழக்கமாக ரீ- சார்ஸ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார். இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது. 
இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள்.

 1. முடிந்த வரை ரீ  சார்ஸ் கார்ட் வாங்கி ரீ சார்ஸ் செய்யுங்கள் .
 2. E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும். இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்.
 3. பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்.
 4. தெரியாத நபர்களிடம் நம்பர் தராத்திர்கள்.
 5. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்க கூடாது என சொல்லுங்கள்.
 6. மிக முக்கியமாக தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள். அப்படி அனுப்பினால் அது மூலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள பார்ப்பார்கள். WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் தேவை இல்லாமல் பெசாதேர்கள். அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்.
 7. பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள் . நீங்கள் அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது .
 8. மொபைல்லை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM CARDமற்றும்  Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும்.
 9. மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்த இடத்தில் மட்டும் கொடுக்கவும். இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள்வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள்.

Thursday, 20 September 2012

நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.


நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .

* Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
* முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .


* make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் .. 
* இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம்.

நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.


நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .

* Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
* முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .


* make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் .. 
* இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம்.

Saturday, 8 September 2012

தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.  இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.  இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.

இங்கே கிளிக் செய்யவும் 

கணிணி பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்களா ?


கணிணியில் பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.


இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.

1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.


2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.


3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.


4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில்Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.

6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.


7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.

8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?

1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.


2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.


3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.

4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.

5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.


அக்டோபர் 22 - தயாராய் இருங்கள்


இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம். விஸ்டா வெளியாகி 33 மாதங்கள் கழித்து அடுத்த தொகுப்பு வெளியாகிறது. சென்ற மே 5ல் முழுப் பதிப்பிற்கு முந்தைய பதிப்பு பொதுமக்களுக்கென வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 ஆறுவகையான பதிப்புகளில் வெளியாகும்.


Windows 7 Starter : ஒரே நேரத்தில் மூன்று அப்ளிகேஷன்களை மட்டுமே கையாள முடியும்.


Windows 7 Home Basic: எழுந்துவரும் சந்தைக்கு ஓர் அடிப்படையான தொகுப்பு


Windows 7: Home Premium எடிஷன். இதில் ஏரோ யூசர் இன்டர்பேஸ், டச் மற்றும் மீடியா சென்டர் தரப்படும்.


Windows 7 Professional: ரிமோட் டெஸ்க் டாப் ஹோஸ்ட், மொபிலிட்டி சென்டர், பிரசன்டேஷன் மோட்.


Windows 7 Enterprise: வால்யூம் லைசன்ஸ் மட்டுமே தரப்படும். விர்ச்சுவல் டிரைவில் இருந்து மட்டுமே பூட் செய்யப்படும். பிட் லாக்கர் உண்டு.


Windows 7 Ultimate; குறைந்த அளவி லேயே கிடைக்கும். அனைத்து வசதிகளும் இருக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்துபவர்களுக்கு பதிப்பை மேம்படுத்தி விண்டோஸ் 7க்கு மாற ஆப்ஷன் தரப்படும். இதற்கென தனியே கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இது குறித்த தகவல்கள் மட்டும் இனிமேல் வெளியிடப் படும் என்று தெரிகிறது
நன்றி : தினமலர்

வாழ்வா சாவா? போராட்டத்துடன் நோக்கியா


இன்று அனைத்து கைபேசி கடைகளிலும் சாம்சங் விரும்பி வாங்கப்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் நோக்கியா கைப்பேசியை தவிர வேறு எதையும் நாம் விரும்பி வாங்குவதில்லை.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கைபேசி சந்தையின் ராஜாவாக இருந்த நோக்கியா இப்போது 3 பில்லியன் யூரோ நட்டத்தில் உள்ளது. மேலும் 10000 பணியாளர்களையும் தூக்கியுள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம் Android கைபேசிகளை அது வடிவமைக்காமல் தனது சொந்த கைபேசி இயக்கு தளம் Symbion கைபேசிகளை மட்டுமே அது விற்பனை செய்து வந்தது.  ஆனால் சாம்சங் நிறுவனம் Android ஐ தனது பல கைபேசிகளிலும் வைத்து விற்று லாபம் சம்பாதித்தது.
2007இல் Apple iPhone வந்த பின்னர் நோக்கியா பல சவால்களை சந்தித்தது. இப்போது முழுக்க முழுக்க Windows Phone இயக்கு தளத்தை மட்டுமே தனது கைபேசிகளில் பயன்படுத்த முடிவு செய்து Lumia கைபேசிகளை விற்பனை செய்து வருகிறது.
iPhone மற்றும் Android இயக்குதளங்களுக்கு ஒரு சரியான மாற்றாக உள்ள இந்த Windows Mobile 7.5 இயக்கு தளம் மெதுவாக வளர்ந்து வருகிறது. இப்போது புதிதாக Windows 8 இயக்கு தளத்தை தமது கணினி மற்றும் கைபேசி சாதனங்களில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது Microsoft. உலகில் விற்கப்படும் ஒவ்வொரு Android கைப்பேசிக்கும் Microsoft நிறுவனம் royalty மூலமாக பெரும் தொகையை Samsung, HTC நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது. ஆனாலும் தனது சொந்த இயக்கு தளம் Windows Phone 7.5 & Windows Phone 8  வெற்றியடைய வேண்டும் என Microsoft பல முயற்சிகளை செய்கிறது.
உலக அளவில் உள்ள கைபேசி சந்தையில் 3.7%  மக்களால் மட்டுமே பயன்பாடில் உள்ள Windows Phone 7  (Android 68% , Apple 17%) 2013 இறுதிக்குள் 10 சதவீதமாக உயர வேண்டும் இல்லையென்றால் நோக்கியா தமது சொத்துக்களை விற்றுவிட வேண்டும் அல்லது தமது கம்பெனியையே விற்கும் சூழல் உருவாகி நோக்கியா அழிந்து விடும்.
Apple தொடுத்த பல வழக்குகளில் சிக்கி பல கோடி டாலர் அபராதம் செலுத்திய Samsung பெரும் சிக்கலில் உள்ளது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி Androidக்கு மாற்றாக மக்கள் Windows Phone  வாங்க விரும்பலாம். மற்றும் புதிதாக வரவுள்ள iPhone 5க்கு போட்டியாக விலை மற்றும் தரத்தில் உறுதியாக புதிய Lumia உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Qualcomm Dual Core Processor
4.3 Inch Display with HIGH Resolution
Powerful cameras in both side
NFC Technology for Wireless payments
Skype calling
ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் iPhone5க்கு(அடுத்த மாதம் அறிமுகம்) போட்டியாக இந்த மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்கிறது   நோக்கியா.
நன்றி  www.techtamil.com