Tuesday 27 November 2012

ஏர்டெல் டூ ஏர்செல் மெச்செஜ் போகாது....

அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்ட செல்போனை இப்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எஸ்.எம்.எஸ். மூலம் பிறரைத் தொடர்பு கொள்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிறந்த நாள் வாழ்த்து மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் பல லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் ஏர்செல் செல்பேசி சேவையிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களுக்கு ஏர்டெல் நிறுவனம் தடைவிதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து வோடஃபோன் சேவை எண்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாத நிலை ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. (இக்கட்டண நிர்ணயம், வசூல் தொடர்பாக முன்னணி நிறுவனங்களுக்கு இடையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

ஏர்செல் நிறுவனம் தனக்கு தர வேண்டிய டெர்மினேஷன் கட்டணத்தைத் செலுத்தாததால் இம்முடிவை ஏர்டெல் எடுத்ததாக தெரிகிறது. வோடாஃபோன் நிறுவனமும் இதே புகாரின் பேரில் ஏர்செல் கட்டமைப்பிலிருந்து எஸ்எம்எஸ் பெறுவதை தடை செய்துள்ளது. இதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப முடியாத நிலை உள்ளது. வோடாஃபோன் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, தமிழகம், டெல்லி, கர்நாடகா ஆகிய தொலைத் தொடர்பு மண்டலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் பெற முடியாது.

டெர்மினேஷன் கட்டணம் என்றல் என்ன?
இரு வெவ்வேறு செல்ஃபோன் நிறுவன வாடிக்கையாளர்கள் இடையில் தகவல் பரிமாற்றம் நிகழும்போது, தகவல் பெறும் வாடிக்கையாளரைக் கொண்ட நிறுவனத்துக்கு, அதை அனுப்பும் வாடிக்கையாளரைக் கொண்ட நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைதான் டெர்மினேஷன் கட்டணம் எனப்படுகிறது.
இந்த இரண்டு செல்பேசி நிறுவனங்களுக்கு இடையே (ஏர்செல் - ஏர்டெல்) நீண்ட காலமாக இருந்து வரும், எஸ்.எம்.எஸ். ஒப்பந்த விவகாரமே இதற்கு காரணமாகும். அதாவது எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு 10 பைசா என்ற வீதத்தில் எஸ்.எம்.எஸ். மாற்று (டெர்மினேஷன்) கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியதே காரணமாகும். இதை எதிர்த்து ஏர்செல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சில நாள்களில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"போற போக்கை பார்த்தால் இந்த நாட்ல 'சாதி விட்டு சாதி','மதம் விட்டு மதம்' மட்டுமில்ல 'நெட்வொர்க் விட்டு நெட்வொர்க்' கூட லவ் பண்ண முடியாது போல"

0 கருத்துக்கள்:

Post a Comment