Tuesday 30 April 2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்!


    மே-1 உழைப்பாளர் தினம். இன்றைய தினம் தான் நடிகர் அஜித்தின் பிறந்தநாளும் கூட. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்த அஜித், சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மெக்கானிக்காக இருந்து வந்தார். அப்படியே படிப்படியாக முன்னேறி சினிமா துறைக்கு வந்தார். அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித், தொடர்ந்து ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, ‌அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா போன்ற அட்டகாசமான படங்களில் நடித்தார். சினிமாவில் 20 வருடங்களாக இருந்து வரும் அஜித் மங்காத்தா படம் முடிய 50 படங்களில் நடித்துள்ளார். தற்போது பில்லா படத்தின் 2ம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார் அஜித். 

    இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் கூறியிருப்பதாவது, என்னுடைய ஒவ்வொரு படத்தையும் பார்க்க ரசிகர்களும், பொதுமக்களும் எவ்வளவு ஆர்வமாக இருக்காங்களோ, அதேபோல் நானும் அவங்களோட விமர்சனங்களை தெரிஞ்சுக்க ஆர்வமாய் இருக்கேன். என்னோட படத்தை பற்றியும் நடிப்பை பற்றியும் நானே பேசினால் நல்லா இருக்காது. நான் எப்படி நடித்திருக்கேன் என்று பொதுமக்கள் தான் சொல்ல வேண்டும். அந்த விமர்சனம் எப்படிபட்டதாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். எது சரி எது தவறு என்று சொல்ல எனக்கு எந்த தகுதியும் கிடையாது என்று கூறியுள்ளார். 

    ரசிகர்கள் குறித்து கூறுகையில், 20 வருடமாக என்னோட ரசிகர்களும் என்னோட பயணம் செய்து கொண்டு இருக்காங்க. என்னைப்பற்றி அவர்களுக்கு முழுசா தெரியும். என்னோட கஷ்டம், எனக்கு நேர்ந்த துன்பம், துரோகம், வலி, மகிழ்ச்சி, என் குடும்பம் இப்படி என்னைப் பற்றி முழுசா தெரிஞ்சு வச்சுருக்காங்க. நானே எதிர்பார்க்காத அளவுக்கு என் மேல பாசத்தை கொட்டுற ரசிகர்கள். அதனால் அவர்களோட எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வேன் என்று அவர்களுக்கு தெரியும். ரசிகர்கள் கூட்டம் என்பது கடவுள் கொடுத்த வரம். இதை என்னோட சுயலாபத்திற்காக ஒருநாளும் பயன்படுத்த மாட்டேன். இதுல நான் உறுதியா இருக்கேன். ரசிகர்களை வெச்சு பிசினஸ் பண்ண நான் விரும்பல, அது நேர்மையாகவும் இருக்காது என்று கூறியுள்ளார். 

     அஜித்தின் பேச்சும், அவரது எளிமையும் வேறு யாருக்கும் வராது. அஜித் நிகர் அஜித்தான்...! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்!


-நன்றி தினமலர்




Saturday 27 April 2013

ஹாப்பி பர்த்டே டூ யூ தல...................


ரஜினி,கமல் என்ற இரு சாதனை சிகரங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கடும்போட்டி நிலவியது.அப்போது முன்னணியிலிருந்த பிரஷாந்த்,விஜய்,அஜித் ஆகியோருக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பிரஷாந்த் பின்னடைவைச் சந்திக்க விக்ரம்,சூர்யா என்போர் போட்டியில் இணைய இன்றுவரை ரஜினி கமல் தங்களிடத்தில் இன்னும் சிம்மாசனமிட்டுள்ளனர் என்பது வேறுகதை.

ஆனால் சினிமாவின் எந்தவொரு பின்னணியில்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்தும் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்திருப்பது சாதாரணவிடயமல்ல,அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் அஜித்.காதல்நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த அஜித் ஆரம்பகாலங்களில் அதிகமான பெண்ரசிகைகளைக் கொண்டவராகவிருந்ததால் காதல்,குடும்ப படங்களிலேயே நடித்திருந்தார்,அதன்பின்னர் சரணின் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், முருகதாசின் தீனா போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன்ஹீரோவாக புதிய பரிமாணம் எடுத்து அதிலும் வெற்றிபெற்றார்.இன்றுவரை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னணியிலிருப்பதுடன் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ஓபனிங் உள்ள நடிகராகவும் விளங்குகிறார்.

இப்போது நான் கூறவந்தது அஜித்திற்கும் மிடியாக்களுக்கும் இடையிலான உறவு பற்றி,இது அனைத்து மிடியாக்கள் பற்றியுமல்ல,தொப்பி பொருத்தமானவர்களுக்கே......

இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் என்பன இப்போதுதான் பிரசித்தம்,முன்னர் பிரிண்ட் மிடியாக்களும் தொலைக்காட்சிக்களும்தான் எல்லாமும்.அந்தக் கால கட்டத்தில் அஜித் வார இதழொன்றுக்கு வழங்கிய தனது "சூப்பர் ஸ்டார்" பற்றிய பேட்டி மூலம் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளானார், அஜித் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறினாலும் மீடியாக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. சரி அஜித் அப்படித்தான் முதலில் கூறியிருந்தாலும் பின்னர் அப்படி கூறவில்லை என்று சொன்ன பின்பாவது விட்டிருக்கலாமல்லவா? ஆனால் தொடர்ந்தும் ரஜினி ரசிகர்களிடமிருந்து அஜித்தை பிரிக்க இதை ஒரு துரும்புச்சீட்டாக சில ஊடகங்கள் பயன்படுத்திவந்துள்ளன.

அதன் பின்னர் அவர் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்,இதனால் ஆளாளுக்கு தாங்கள் விரும்பியதை எழுத ஆரம்பித்தனர்,அஜித்தான் எந்த பதிலோ மறுப்போ சொல்லமாட்டாரே இது போதாதா இவர்களுக்கு? அஜித் எங்காவது ஏதாவது கூறினால் உடனே அதனை திரிபுபடுத்தி புதுஅர்த்தம் கற்பிக்க ஒரு கூட்டமே ஆயத்தமாயிருந்தது. இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் ஆதிக்கம் அதிகமானபின் ஒவ்வொரு நடிகர்களுக்கும் சார்பானவையாக இவை செயல்பட ஆரம்பித்தன.அஜித்தின் போட்டி நாயகர்களின் சார்பு ஊடகங்கள் இதில் முன்னணி வகித்ததென்றால் அது மிகையல்ல,குறிப்பாக ஒரு தொலைக்காட்சி குடும்பமும்,அவர்களது பத்திரிகைகளும் அஜித்தின்படங்கள் நன்றாக ஓடினாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் ஒருசில நடிகர்களின் தோல்வி படங்களைக்கூட வெற்றிப்படங்களாக சித்தரித்திருந்தன.

அண்மையில் அஜித் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் "எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை" இது நூற்றுக்கு நூறு உண்மை,தமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை.

மற்றைய நடிகர்கள் போல படத்தை வெளியிட்டுவிட்டு கூவி விற்க இவர் தொலைக்காட்சிகளுக்கு ஓடித் திரிவதில்லை.பில்லா படம் வெளிவருவதற்கு முன் பல ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்,அதற்காக வஞ்சகமின்றி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு பேட்டி வீதம் கொடுத்திருந்தார்,அதன்பின் இன்னமும் சின்னத்திரைப்பக்கம் அஜித் 'தல'காட்டவில்லை.

ஆனாலும் ஒரு முன்னணித் தொலைக்காட்சி அஜித் படங்களை தோல்வி ஆக்க கடுமையாக உழைக்கும்.டாப் டென் படங்கள்,பாடல்கள் என்பவற்றில் இயலுமானவரை அஜித் படங்களை பின் வரிசையில் போட்டு படத்தின் மீதான பார்வையைக் குறைத்துவிடுவதோடு விமர்சனம் என்ற பெயரில் ஏதேதோ கூறி படத்தை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார்கள். அஜித் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இவர்களின் கலையகத்துக்கு வந்து பேட்டி கொடுத்திருந்தாலோ,இவர்களின் தொலைக்காட்சிக்கு நன்றி கூறியிருந்தாலோ டாப் டென்னில் முதலிடம் கிடைத்திருக்கும்.அல்லது தனது படத்தின் ஒளிபரப்பு உரிமையை இவர்களுக்குக் கொடுத்திருந்தாலோ அஜித் புராணம் பாடப்பட்டிருக்கும்.

இவற்றில் எதுவுமே அஜித் செய்யாததுதான் இவர்களுக்கு அஜித் பிடிக்காமல் போனகாரணம்.அதுவும் இவர்கள் அதற்குப் பயன்படுத்தும் டெக்னிக் இருக்கிறதே,போட்டி நடிகரின் படமொன்றுடன் அஜித் படம் ரிலிஸ் ஆகினால் அஜித் படத்திற்கு கண்டிப்பாக மூன்றாவதிடம்தான்.கூடவந்த ஒரு டப்பா படத்திற்கு இரண்டாமிடம்,அல்லது ஏலவேவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் இரண்டாமிடத்தை பிடிக்கும்,இதை உண்மையென்று நம்பி ஞாயிறுகாலை தொலைக்காட்சிக்கு முன்னிருந்த காலங்களுமுண்டு.இப்போதான் இவர்களின் டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கே....

அந்த முக்கிய தொலைக்காட்சி இப்போது கடைசியாக விஷாலின் படமொன்றை வாங்கி அசலுடன் போட்டிக்கு இறக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சு,என்னதான் விளம்பரம் செய்தாலும் ஒரு படத்தின் ஒபநின்கை அதிகரிக்க முடியுமேயன்றி படத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியாது.அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் இரண்டாம் வாரத்துடன் குப்புற விழுந்தது இதற்கு சான்று.ஆனாலும் கிங் ஒப் ஒபெநிங்(King Of Opening ) அஜித்திற்கு முன் இவர்களின் விளம்பரம் எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை,அதன் பின் இவ்விரண்டு படங்களின் தரத்தை பொறுத்தது இவற்றின் வெற்றி.

இதனைத் தான் அசல் ஆடியோ ரிலிசிலும் அஜித் கூறியிருந்தார் "நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை" என்று .ஆனால் மறுநாள் ஒரு இணையத்தளத்தில் செய்தி வந்திருந்தது."என் படங்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை " என்று.இப்படித்தான் அஜித் கூறும் அனைத்துக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

இதே போன்றே அண்மையில் தனது பெயருக்கு முன்னால் வரும் பட்டப்பெயரை (அல்டிமேர் ஸ்டார் ) போடவேண்டாம் என்று அஜித் கூறியதை ஒரு முக்கிய சினிமா இணையத்தளம் "அஜித் ஜோதிடரின் பேச்சை கேட்டே இவ்வாறு கூறியுள்ளார்" என்றும்,முன்பு அஜித் பட்டப்பெயர் போடாத காலங்களில் அதிக வெற்றி கிடைத்ததால் மீண்டும் பட்டப்பெயரை போடாமல் விடப்போகின்றார் என்றும் பிளேற்ரை மாற்றிப்போட்டன. நம் தலைவலி ரசிக சிகாமணிகளுக்கு இது போதாதா? உடனே சித்து வேலையே ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடமிருக்கும் கெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே...

எது எப்படியோ மனதில் பட்டதை கூறிவிட்டு,நடிப்பு என்பதை தொழிலாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் 'தலை'க்கு ஒரு சல்யுட்.. ஹாப்பி பர்த்டே டூ யூ தல...................


Wednesday 24 April 2013

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!



புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார். 


வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார். 

காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்? 

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன். 

இது உணர்த்துவது என்ன? 

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. õக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

நன்றி-மங்கையர்மலர்

Wednesday 3 April 2013

மனிதர்கள் வாழ்வில் தன்னம்பிக்கை என்னும் தாரக மந்திரம்...


வணக்கம் நண்பர்களே!!!


          இந்த உலகில் யாரிடம் இல்லை தன்னம்பிக்கை எல்லோரிடமும் நிறைய கொட்டி கிடக்கின்றது நாம்தான் கண்டுகொள்ளவில்லை, கடலுக்கு செல்லும் மீனவனுக்கு தெரியாது திரும்ப  கரை சேர்வோமா என்று ஆனால் எதையுமே யோசிக்காமல் மனதில் தன்னம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு நடு கடல் வரை சென்று தொழில் செய்யும் மீனவனை கரை சேர்ப்பது தன்னம்பிக்கை தன். இவ்வளவு ஏன் தன்னம்பிக்கை இருப்பதால் தான் மனிதன் இரவு தூங்குகிறான்


   விதையென விழு! விருட்சமென எழு!!